தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - நவம்பர் 13 & 15 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - நவம்பர் 13 & 15 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நவம்பர் 13 & 15 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் எப்போது விடுமுறை வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பர். வார விடுமுறை ஒரு பக்கம் இருந்தாலும் வரம் இடையில் ஏதாவது லீவு வந்தால் மாணவர்களை கையில் பிடிக்க முடியாது. ஏன் கடந்த மாதம் கூட மாணவர்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. குறிப்பாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி என சுமார் 10 முதல் 15 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் மாணவர்கள் குஷியில் இருந்து வந்தனர்.

நவம்பர் 13 & 15 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் இந்த நவம்பர் மாதம் விடுமுறை கிடைக்குமா என மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மாணவர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் ஏதேனும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  கந்த சஷ்டி திருவிழாவையொட்டி  முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதி நடைபெற இருக்கிறது.  எனவே அந்த நாளில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழா நவம்பர் 13ஆம் தேதி நடைபெற இருப்பதால், அன்று அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

சீமானால் தன் உயிருக்கு ஆபத்து – நீதிமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய திருச்சி சூர்யா!

அதுமட்டுமின்றி, மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு வருகிற நவம்பர் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 23.11.2024 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்? 

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?

ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?

TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *