அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு - விசாரணை செய்த நீதிபதி விலகல் !அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு - விசாரணை செய்த நீதிபதி விலகல் !

ஓபிஎஸ் தரப்பில் அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய எதிர்க்கட்சியான அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என பிரச்சினைகள் எழுந்த சூழலில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு கடுமையாக எதிர்த்து வந்ததை தொடர்ந்து தற்போது வரை அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. AIADMK general committee single leadership case – investigated judge withdrawal

அதிமுக பொதுக் குழுவை எதிர்த்தும், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்தும் உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது .

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

அந்த வகையில் 2022 ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜெயச்சந்திரன் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் அந்த வழக்கில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *