தற்போது பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க தடை, இந்த நிலையில் மத்திய அமைச்சராக உள்ள சுரேஷ் கோபி இனி சினிமாவில் நடிக்கக்கூடாது என பாஜக தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க தடை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சுரேஷ் கோபி :
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அமைச்சரவையில் இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஏராளமான அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டன.
அந்த வகையில் கேரளாவில் இருந்து வெற்றிபெற்ற நடிகர் சுரேஷ் கோபி ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்றார்.
தனக்கு அமைச்சர் பதவியில் விரும்பம் இல்லை :
இதனையடுத்து மலையாள ஊடகத்துக்கு பேட்டியளித்த சுரேஷ் கோபி, தனக்கு அமைச்சராக தொடர்வதில் விருப்பம் இல்லை என்றும் தான் தொடர்ந்து நடிக்கவிரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய அவர், “தனக்கு அமைச்சர் பதவியில் விரும்பம் இல்லை என்று முன்னரே கட்சித் தலைமையிடம் முன்கூட்டியே கூறியிருந்தேன். எனினும் கட்சித் தலைமை கூறியதால் மட்டுமே பதவியேற்றுக் கொண்டேன் என்று தெரிவித்தார்.
அத்துடன் என்னுடைய கோரிக்கையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து என்னை கட்சித் தலைமை விடுவிக்கும் என்று நம்புகிறேன்.
மேலும் நான் ஏற்கனவே படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதால் அதனை தொடர விரும்புகிறேன் என்றும் எம்.பி.யாக திருச்சூர் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்திருந்தார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு !
திரைப்படங்களில் நடிக்க கட்டுப்பாடு :
இந்த நிலையில் மத்திய அமைச்சராக உள்ள சுரேஷ் கோபி இனி சினிமாவில் நடிக்கக்கூடாது என பாஜக தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் அமைச்சரான போது இனி திரைப்படங்களில் நடிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த சுரேஷ் கோபி ஏற்கனவே படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதால் அதனை தொடர விரும்புவதாகவும், அமைச்சர் பதவி கூட வேண்டாம் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சுரேஷ் கோபி ஆச்சேபம் தெரிவித்தாலும் வேறு வழியின்றி அவர் அமைச்சர் பதவியில் தொடரவுள்ளதாக கூறப்படுகிறது.