வளர்ப்பு பூனைக்கு முடி வெட்ட 1.86 லட்சம்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக பதவி வகித்து வந்தவர் தான் வாசிம் அக்ரம். அதுமட்டுமின்றி கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 500 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் பெருமையும் படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்த இவர், cricket போட்டிகளின் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டி நடந்த நிலையில் அந்த போட்டிக்கு வர்ணனையாளராக வந்த அவர் பேட்டி கொடுத்த போது தனது பூனை குறித்து பேசியுள்ளார்.
வளர்ப்பு பூனைக்கு முடி வெட்ட 1.86 லட்சம்
அதில் அவர் பேசியதாவது, ” என்னுடைய பூனைக்கு முடி வெட்டுவதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடைக்கு சென்றேன். அந்த கடையில் முடி வெட்டி முடித்தவுடன் அதற்காக பாகிஸ்தான் பணம் ரூ. 1.83 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ. 55,000) செலுத்த வேண்டியது இருந்தது” என கூறினார்.
அரசு பேருந்துகளை முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு குலுக்கல் பரிசு – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
ஆனால் இதை யாரும் நம்பாத நிலையில், உடனே அதற்கான ரசீதை எடுத்து காட்டினார். அதில், மயக்க மருந்து செலவு ரூ. 56,000, இருதய துடிப்பு சோதனை ரூ.46,000, பூனையின் மருத்துவ பரிசோதனைக்கு ரூ. 20,000 மற்றும் முடி வெட்டுவதற்கு ரூ. 7,300 என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக செலவு குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?