9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்: தமிழகத்தில் இருக்கும் மாணவ மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இதற்காக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது.
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்
மேலும் ஏழை எளிய மாணவர்கள் மேற்படிப்பு தொடர பணம் ஒரு தடையாக இருந்து விட கூடாது என்பதற்காக மத்திய அரசின் கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல 9ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் ₹1,000 வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே ஊரக பகுதியை சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
TNPSC குரூப் 4 புதிய அப்டேட்: சான்றிதழ்களை பதிவேற்ற காலக்கெடு – இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு!
மேலும் இந்த உதவித்தொகை பெற வருகிற நவம்பர் 20ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்களிடம் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மாவட்டம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள 100 மாணவ மாணவியர்களுக்கு தான் இந்த தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?