பள்ளி கல்வித்துறை புதிய விதிமுறை விதிப்பு: தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அரமிக்கப்படுத்தி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளி கல்வித்துறை புதிய விதிமுறை விதிப்பு
இந்நிலையில், பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் விதமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் பின்பக்க அட்டையில் 14417, 1098 போன்ற கட்டணயில்லா தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட இருக்கிறது.
மேலும் பாலியல் துன்புறுத்தல் சார்ந்த விவரங்களை புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (SSAC) Student safeguarding advisory committee குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளிலிருந்து மாணவ/மாணவியர்களை NSS & NCC போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் என மாவட்ட அளவில் சென்றால் மாணவர்களின் பெற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும்.
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024 – உள்துறை அமைச்சகம் ஒப்புதல்!
அதன் பிறகு மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அனுமதி இல்லாமல் மாணவர்களை வெளியே அழைத்து செல்ல கூடாது. அதுமட்டுமின்றி மாணவியர்களிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்பவர்கள் மீது காவல் துறை வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?