சென்னை கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலி - குடும்பத்தினர் போராட்டம்!சென்னை கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலி - குடும்பத்தினர் போராட்டம்!

சென்னை கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலி: கடந்த புதன்கிழமை சென்னை கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணியாற்றி வரும் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலி – குடும்பத்தினர் போராட்டம்!

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தனர். இருந்தாலும் அவசர சிகிச்சையில் மருத்துவர்கள் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். அதன்பிறகு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Join WhatsApp Group

இந்நிலையில், பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(வயது 30) என்ற இளைஞருக்கு பித்தப்பை கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு பணம் செலுத்த முடியாத காரணத்தால் நேற்று வியாழக்கிழமை கலைஞர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பொதுப் பிரிவுக்கு வியாழக்கிழமை மாற்றியுள்ளனர்.

இனிமேல் இந்த வங்கி இயங்காது – RBI எடுத்த அதிரடி முடிவு – கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

அந்த சமயம் அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை விக்னேஷ் உயிரிழந்துள்ளார். அவரை முறையாக பரிசோதனை செய்யாமல் பொதுப் பிரிவுக்கு மாற்றியதால் தான் இறந்ததற்கு காரணம் என்று கூறி குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். இறந்த விக்னேஷ் அவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை

மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை

CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *