தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 - 2025 ! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 - 2025 ! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

தற்போது தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 – 2025 பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு 2024 – 2025 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தற்போது மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு 2024 – 2025 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT , IIM , NIT , மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த BC , MBC , DNC மாணவர்கள் 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை (Fresh and Renewal Applications) பெற விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே தெரிவித்துள்ளார் .

மேலும் இந்த கல்வி உதவித்தொகை பெற குடும்ப வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. students-of-central-government-educational-institutions-can-apply-for-educational-assistance

அத்துடன் இக்கல்வி உதவித்தொகைக்கு 2024 – 25 ம் ஆண்டில் புதிதாக, ஏற்கனவே விண்ணப்பித்து புதுப்பிக்க உள்ளவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் படிவம் பெற்றோ அல்லது http://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணைய முகவரியில் பதவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *