சபரிமலைக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் !சபரிமலைக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் !

சபரிமலைக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முக்கிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல காலம் பூஜையை தொடர்ந்து தற்போது கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முக்கிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. Sabarimala -ayyappa-temple-devotees-Special buses

இதனை தொடர்ந்து நவம்பர் 15ம் தேதி முதல் வரும் 2025 ஜனவரி 16ம் தேதி வரை சென்னையில் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்தும், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு

அதிநவீனச் சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குழுவாகச் செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது – காவல்துறை அதிரடி அறிவிப்பு!

மேலும் இச்சிறப்புப் பேருந்துகளுக்கு Online மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 27, 30ஆம் தேதி மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 வரை இச்சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *