கார்த்திகை மாதம் 2024: நவம்பர் 16 முதல் தொடக்கம்: பொதுவாக கார்த்திகை மாதம் ஆரம்பித்து விட்டாலே பக்தர்கள் அனைவரும் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து சுவாமி ஐயப்பனை காண செல்வது வழக்கம். ஐயப்பனின் அருளை பெற உகந்த மாதம் இந்த கார்த்திகை தான்.
இந்நிலையில் இந்த வருடம் 2024 இன்று நவம்பர் 16 (சனிக்கிழமை) கார்த்திகை மாதம் தொடங்குகிறது. அதுவும் இந்த வருடம் கார்த்திகை மாதம் முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தில் முதல் நாள் தொடங்குவது சிறப்பாக இருக்கிறது. எனவே கார்த்திகை மாதத்தின் விரதம் முறைகள் என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் 2024: நவம்பர் 16 முதல் தொடக்கம் – நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!
கார்த்திகை மாதத்தில் வரும் ’துவாதசி’ திதி அன்று தான் மகாவிஷ்ணுவை துளசி தேவி கல்யாணம் செய்து கொண்டதாக ஐதீகம் உள்ளது. இதன் காரணமாக மகாவிஷ்ணுவை துளசியால் அர்ச்சனை செய்து, துளசி மாலை அணிந்து வழிபட்டு வந்தால், மகாவிஷ்ணுவின் பாதத்தை அடையலாம் என்றும் கூறுவார். அதே போல் லக்ஷ்மி கடாக்ஷம் அடையவும், மகாலட்சுமியின் அருளை பெறவும் துளசி மாலை அணிந்து நாராயணனை வழிபடலாம்.
மேலும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை யும் பெருமாளுக்கு விரதம் இருக்கலாம்.
அருகில் இருக்கும் மகாவிஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபடலாம். அதே போல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் உங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது.
குறிப்பாக சொல்ல போனால் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் விளக்கை ஏற்றி வைத்தால்.
கிங் விராட் கோலிக்கு என்ன தான் ஆச்சு? – திடீர் மருத்துவப் பரிசோதனை!
கெட்டது விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மேலும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருவுக்கு உகந்த நாள் என்பதால் அன்று ஒரு வேலைக்கு விரதம் இருந்து வந்தால், புத்திர பாக்கியம் தடைபடுவது, திருமண நிகழ்வுகள் தள்ளிப் போவது, வீட்டில் நல்லது நடக்கும். மேலும் கார்த்திகை மாதத்தில் உங்கள் வீட்டுப் பக்கம் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றினால் உங்கள் வாழ்வும் ஒளிரும்.
சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024
திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை
ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 !
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024