உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து: உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் என்ற அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து
இதனை தொடர்ந்து மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு சரியாக 10.35 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடம் முழுவதும் தீ பரவி வந்த நிலையில் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது. உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கிங் விராட் கோலிக்கு என்ன தான் ஆச்சு? – திடீர் மருத்துவப் பரிசோதனை!
இந்த கோர சம்பவத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகியும், மூச்சுத் திணறல் ஏற்பட்டும் உயிரிழந்தனர். 16 குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்