அறுபடை வீடு முருகன் கோவில்!அறுபடை வீடு முருகன் கோவில்!

அறுபடை வீடு முருகன் கோவில்: தமிழ் கடவுள், கருணை கடவுள் என வேண்டிய வரத்தை அருளும் முருக பெருமானின் ஆறுபடை வீடுகள் பற்றி பார்ப்போமா!

Murugan Arupadai Veedu Location

இது முருகனின் முதல் படைவீடு. மதுரையின் மையத்தில் இருந்து 10 கி மீ தொலைவில் உள்ளது.

தெய்வானையை வேலன் கரம் பிடித்த ஸ்தலமும் இதுவே. ஆறுபடை வீடுகளில் முருகனுக்கு பதிலாக வேலுக்கு அபிஷேகம் நடைபெறும் இடமும் இதுவே .

சுப்ரமணிய ஸ்வாமியின் அறுபடை வீடுகளில் கடற்கரையோரம் உள்ள ஒரே கோவில் திருச்செந்தூர் ஆகும்.

முருகனின் இரண்டாம் படைவீடான இங்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வை காண ஓடோடி வருகின்றனர்.

இது தூத்துக்குடியிலிருந்து 40 கி மீ தொலைவில் உள்ளது

தண்டாயுதபானியின் அறுபடை வீடுகளில் பழனிக்கு தனிச்சிறப்பு உண்டு. இங்கு தமிழகம் அல்லாமல் அண்டை மாநிலத்தவர்களும் வந்து ஸ்வாமியை தரிசித்து செல்கின்றனர்.

பழனி முருகன் கேரளாவை நோக்கி அருள் பாலிப்பதாக கேரள மக்கள் நம்புகின்றனர். அதனால் கேரள மக்களின் இஷ்ட தெய்வமாகவும் முருகன் உள்ளார்.

இத்தலம் முருகனின் 3ம் படை வீடு. இக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 59 கி மீ தொலைவில் திருஆவினன்குடி என்ற மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு முருகன் ஆண்டி அலங்காரத்திலும், ராஜஅலங்காரத்திலும் காட்சியளிக்கிறார்.

இங்குள்ள முருகனின் சிலையை சித்தர் போகர் நவபாஷாணத்தால் செய்து பிரதிஷடை செய்துள்ளார்.

ஔவையார் “பழம் நீ ” என முருகனை அழைத்ததால் இத்தலம் பழனி என ஆனது.

கண்டுகொண்டேன் முருகா வந்தது யார் என்று கண்டுகொண்டேன் – முருகர் யுகம் ஆரம்பமே!

கும்பகோணத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது சுவாமி மலை. இது முருகனின் 4 ம் படை வீடு.

இங்குதான் வேலன் தன் தந்தையான ஈசனுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை போதித்து அவருக்கே குருவாக மாறியதால் இது குருமலை என்றும் அழைக்க படுகிறது.

இம்மலைக்கோயில் படிகள் 60 தமிழ் ஆண்டுகளை குறிக்கும் வகையில் உள்ளதாக நம்பப்படுகிறது.

இது முருகனின் 5ம் படை வீடாகும். சென்னையில் இருந்து 75 கி.மீ தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி உள்ளது.

இங்குதான் வேலன் வள்ளியை சந்தித்து திருமணம் செய்து கொண்டார்.

ஒரு ஆண்டின் 365 நாட்களை குறிக்கும் வண்ணம் திருத்தணி மலைக்கோவிலில் 365 படிகள் உள்ளது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரின் பாடல் பிறந்த ஸ்தலம் இதுவே.

ஆறுபடை வீடுகளில் இதுவே ஆறாம்படை வீடாகும்.

மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில் அழகர்மலைக்கு செல்லும் வழியில் சோலைமலை என்ற மலை மீது உள்ளது பழமுதிர்ச்சோலை. முருகன் தன துணைவியாரான வள்ளி மற்றும் தெய்வானை உடன் காட்சி தரும் ஒரே இடம் இதுவே.

ஆன்மீகம் தகவல்கள்

தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்கள் மற்றும் அதன் சிறப்புகள் !

தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் !

செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள் கோவில் தமிழகத்தின் தென் திருப்பதி !

உங்கள் ராசிக்கு கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் முழு விபரம் உள்ளே !

தங்கம் வீட்டில் தங்கவில்லையா ! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம் !

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள் ! தமிழகத்தில் உள்ள முக்கிய சரஸ்வதி கோவில்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *