அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தொடர்ந்து பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் தற்போது புதிய வசதியை அறிவித்துள்ளது.
அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம் – இன்று மதியம் 12 மணி முதல் அமல்.. TNSTC தகவல்!
அதாவது, வெளியூர் செல்லும் மக்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதுவும், 60 நாட்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
தற்போது 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும், இன்று மதியம் 12 மணி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. விடுமுறை நாட்களின் போது கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
2026 தேர்தலில் TVK தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி இதான்! மாவட்ட தலைவர் சொன்ன தகவல்!
எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தான் முன்பதிவு நாட்களை அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். எனவே மக்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று போக்குவரத்து கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்