உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2025உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2025

World Consumer Rights Day 2025 வரலாறு: உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2025 ஒவ்வாரு ஆண்டும் மார்ச் 15ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதன் காரணம் என்னவென்றால் 1962 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன்.எப்.கென்னடி அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகள் சட்டம் பற்றி பேசிய உரை உலக அளவில் முக்கிய உரையாக பேசப்படுகின்றது.

இதன் காரணமாகவே ஒவ்வாரு ஆண்டும் மார்ச் மாதம் 15ம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி 1963ம் ஆண்டு முதல் மார்ச் 15ம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்தியாவில் 1986ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி நுகர்வோர் உரிமைகள் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஒரு பொருளை காசு கொடுத்து தன் சுய தேவைக்காக வாங்கி பயன்படுத்தும் ஒவ்வாரு நபரும் நுகர்வோர் தான்.

காசு கொடுத்து வாங்கிய பொருளை வணிக நோக்கில் மற்றவர்களுக்கு விற்கும் நபர் நுகர்வோர் ஆக மாட்டார்கள்.

நாம் இப்பொது டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்தாலும் நாம் வாங்கி பயன்படுத்தும் பொருட்களில் பல வழிகளில் ஏமாற்றம் அடையத்தான் செய்கின்றோம்.

எங்கோ ஒருவர் தரமற்ற பொருளை தயாரித்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும்.

நாம் வாங்கி பயன்படுத்தும் பொருள் தரமானதா, விற்பனை விலையில் தான் பொருள் விற்பனை செய்யப்படுகின்றதா,பொருளின் பயன் என்ன ? என்பதை அறிந்து கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு.

நாம் வாங்கும் பொருள் தரமில்லமல் இருந்தால் பொருளை விற்ற கடைக்காரர் மீது வழக்கு தொடுக்கலாம்.

இந்த வழக்கினை விசாரித்து நமக்கு சரியான நீதி வாங்கி தருவதற்கு தான் நுகர்வோர்சட்டம் கொண்டுவரப்பட்டு நுகர்வோர் நீதிமன்றம் செயல்படுகின்றது.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை

1.பாதுகாப்பு உரிமை

2.தகவல் பெறும் உரிமை

3.விருப்பத்தினை தேர்வு செய்யும் உரிமை

4.குறைதீர்க்க கேட்டகப்படும் உரிமை

5.நுகர்வோர் கல்வி பெறும் உரிமை

6.குறை நிவர்த்தி பெறும் உரிமை

7.சுகாதாரமான சுற்றுசூழல் உரிமை

8.அடிப்படை தேவை உரிமை

நுகர்வோர் வாங்கும் பொருளில் குறை இருப்பின்,பொருளின் விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டால் ,சட்டத்திற்கு புறம்பான நம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நாம் புகாரினை மாவட்ட ஆட்சி தலைவர்,நுகர்வோர் குறை தீர்க்கும் அமைப்பின் மூலம் அளிக்கலாம்.

நாம் புகாரினை குறை கண்டறிந்த 2 ஆண்டுக்குள் குடுக்க வேண்டும்.வழக்கறிஞர் தேவை இல்லை .கட்டணம் எதும் தேவை இல்லை.

1.புகார் செய்யப்படும் நபரின் பெயர்,முகவரி

2.நாம் பொருள் வாங்கிய தேதி,தொகை,எண்ணிக்கை

3.நாம் வாங்கிய குறையுள்ள பொருளின் முழு விபரம்

4.நாம் வாங்கிய பொருளின் ரசீது நகல்,பயண செலவின் நகல்

5.குறையின் நிமித்தம் நாம் எதிர்பாக்கும் நிவாரணம்

நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தின் மூலம் நாம் பெரும் நிவாரணம் :

1.பொருளின் குறையை நீக்கிட முடியும்

2.நாம் வாங்கிய பொருளுக்கு பதில் மாற்று பொருளை வாங்கிடலாம்

3.நாம் இழந்த நஷ்டத்திற்கு இழப்பீட்டு தொகை பெறலாம்

4.தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனையில் இருந்து நீக்கிட முடியும்

1.குறைதீர் மன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து 30 நாட்களுக்குள் மாநில குறைதீர் ஆணையத்திலும் மேல்முறையீடு செய்யலாம்.

2.மாநில குறைதீர் ஆணையத்தின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் தேசிய குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

3.தேசிய குறைதீர் ஆணையத்தின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

world consumer rights day 2025 theme india

மேல்முறையீடு செய்யும் போது நம் குறைபாடுடைய பொருளின் கரணம்,ஆணையத்தின் முடிவின் நகல் கொண்டுசெல்ல வேண்டும்.நாம் போடும் வழக்குக்கு கட்டணம் எதும் கிடையாது.

சூப்பர் சிங்கர் 10 ஷோவின் நடுவர்கள் லிஸ்ட் – புதிதாக இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர் சம்பளம் விவரம் – யாருக்கு அதிகம் பாருங்க!

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் தெரியுமா? இதுல 5  வருடத்தில் 12  லட்சம் பெறலாம்?

விஜயாவிடமே கைவசம் காட்டிய ரோஹினி – வசமாக சிக்குவாரா?.. பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை!

டெபிட் கார்டு இல்லாமல் UPI Pin உருவாக்குவது எப்படி? அது ரொம்ப ஈஸி தாங்க – முழு விவரம் உள்ளே!

TNPSC மற்றும் SSC தேர்வு எழுத போறீங்களா! வரலாற்றில் இன்று 16.11.2024 என்னனு தெரிஞ்சிக்கோங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *