ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் முக்கிய பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆம் ஆத்மி :
தற்போது டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் அம்மாநிலத்தின் முதலமைச்சராக அதிஷி இருந்து வருகிறார். அதேபோல் அம்மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சராக கைலாஷ் கெலாட் இருந்து வந்தார். இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த டெல்லி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார்.
அமைச்சர் பதவி ராஜினாமா :
இந்நிலையில், நவம்பர் 17 அன்று டெல்லி மாநில அமைச்சரான கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அவர் ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக கூறி கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
அத்துடன் இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி முதலமைச்சரான அதிஷி ஆகியோருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார்.
அவர் எழுதியாய் கடிதத்தில் “டெல்லி மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை கட்சியால் நிறைவேற்ற முடியாதது அதிருப்தி அளிக்கிறது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் காரணமாக பதவி விலகுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி – 5,000 சிம்கார்டுகளை முடக்கம் – சைபர் கிரைம் நடவடிக்கை !
பாஜகவில் இணைத்தார் :
அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய அமைச்சர் கைலாஷ் கெலாட் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் முக்கிய பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார்.
சமீபத்திய செய்திகள் :
2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை – தவெக புஸ்ஸி ஆனந்த்
அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம்
2026 தேர்தலில் TVK தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி இதான்!
IPL 2025ல் RCB அணி புதிய கேப்டன் யார் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!
இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்குள்ளது?