தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: முத்து குளித்தல்,மீன்பிடித்தல் என்று சொன்னாலே சொன்னாலே அனைவரின் நினைவிற்கு வருவது தூத்துக்குடி தான். தூத்துக்குடி உப்பு தன ஆசிய கண்டத்திலேயே சிறந்த உப்பு ஆகும். இன்றளவும் முக்கிய வணிகத்தலமாக தூத்துக்குடி இருந்து வருகின்றது.
விருதுநகர்க்கு அடுத்து சுவையான புரோட்டா தூத்துக்குடியில் தான் கிடைக்குமாம். இப்படி தூத்துகுடியின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். தூத்துகுடியின் மற்றொரு சிறப்பு அங்கமாக இருப்பது தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் தான்.
ஆலய அமைவிடம்:
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் வங்கக்கடலின் ஓரத்தில் அமைந்துள்ளது. ஆலயமானது திருநெல்வேலியில் இருந்து 60 கிமீ தொலைவில் இருக்கின்றது. ரயில் மற்றும் விமான வசதியும் உள்ளது.
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் வரலாறு:
உரோமை நகரில் ஆகஸ்ட் மாதம் பனி இல்லாத காலத்தில் கிபி 352 ஆகஸ்ட் மாதம் 5ம் நாள் மலை மேடுகளில் பனி சூழ்ந்த அதிசயம் நிகந்தது.
இதனை காண வந்தோர் பலர்.உரோமை நகரில் பத்திரிஸ் அருளப்பர் என்னும் செல்வந்தர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.
இவர்களுக்கோ குழந்தைகள் இல்லை.அன்னை மரியாள் மீது மிகுந்த பற்று கொண்டவர் தன் சொத்துக்களை எல்லாம் அன்னைக்கு அர்ப்பணிக்க தினமும் ஜெபித்து வந்தார்.
இவரின் எண்ணத்தை அறிந்த மரியாள் பதிலளிக்க ஆகஸ்ட் 5ம் தேதி இவர்கள் கனவில் அன்னை தோன்றி எஸ்களின் மலையில் ஆலயம் கட்டுமாறு கூறினாள்.
இருவரும் எழுந்து பாப்பராசரரிடம் சென்று கூறும் போது அவரும் இதே கனவை கண்டதை கூறினார்.
பனி சூழ்ந்த அந்த மலையிலே அன்னைக்கு முதல் ஆலயம் அமைக்கப்பட்டது.
கார்த்திகை மாதம் 2024: நவம்பர் 16 முதல் தொடக்கம் – நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!
தூத்துக்குடி பனிமய மாதாவின் ஆலய வரலாறு :
16ம் நுற்றாண்டில் போர்ச்சுகீசியர்களலால் கட்டப்பட்டதாகும்.1603ம் ஆண்டு மதுரை நாயக்கர் மன்னர் படையெடுத்த போது ஆலயம் இடிக்கப்பட்டு,தீ வைக்கப்பட்டது.
1621 ம் ஆண்டு மீண்டும் ஆலயம் கட்டி எழுப்பப்பட்டது.1695ம் ஆண்டு டச்சுகரார்களால் மீண்டும் இடிக்கப்பட்டு கல்லறைதோட்டமாக மாற்றப்பட்டது.
1699ல் டச்சுகரார் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் ஆலயம் கட்டி எழுப்பப்பட்டது.
1707 ஏப்ரல் 4ம் தேதி பலத்த புயல் மழையின் போது திருத்தந்தை விஜிலியுஸ் மான்சி அன்னையின் முன் மண்டியிட்டு வேண்டிக்கொண்டிருந்தபோது இடி ஒன்று அன்னையின் சுருபத்தின் மீது விழுந்தும் சுருபத்திற்கு ஒன்றும் ஆகமலும் புகையின் காரணமாக கருநீல நிறமாக மாறி இருந்ததாகவும் ஆலயத்தை சுற்றி இருந்த புனிதர் சுருபங்கள் சேதாரம் அடைந்திரும் தனக்கும் எதும் ஆகாமல் இருப்பதை பெரும் அதிசயமாய் கருதினர்.
1713ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி புதிய கற்கோவில் திறக்கப்பட்டது.1982ம் ஆண்டு ஜனவரி 2ம் நாள் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தை பேராலயமாக அறிவித்தார்.
ஆலயத்தின் மற்றொரு சிறப்பு :
தூத்துக்குடி பனிமய ஆலயத்தில் ஏசு நாதர் தொங்கிய சிலுவையின் ஒரு மரத்துண்டு பத்திரமாக பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
அன்னையின் சுருபம்:
தூய பனிமாய மாதா சுருபமானது 1555 ஜூன் 9 ம் தேதி கப்பல் மூலம் தூத்துக்குடி ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.
Thoothukudi Panimaya Mata Temple Highlights and Mothers History
அன்னையின் சிறப்புகள் சொல்லி முடியாதவை.ஆலயத்தில் அன்றாடம் அற்புதங்களும் புதுமைகளும் நடந்த வண்ணமாய் இருக்கின்றது.அன்னையை நாடி வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிந்தவண்ணமாய் இருக்கின்றது.
புனித தேவ சகாயம் பிள்ளை ! தமிழகத்தின் முதல் புனிதர் !
சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள் ! சபரிமலை போறீங்களா இது உங்களுக்குத்தான் !
மதுரையிலேயே உள்ள பஞ்சபூத தலங்கள், எங்கெங்கு உள்ளது வாங்க பாக்கலாம் !
ருத்ராட்சம் மாலை பயன்கள் ! ஏக முகம் முதல் 14ம் முகம் வரை தரும் நன்மைகள் எத்தனை தெரியுமா ?
திருப்பதி மொட்டை: நாம் செலுத்தும் முடி காணிக்கை என்னவாகிறது தெரியுமா?