தற்போது திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்ப வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின் முடிவு எட்டப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
திருச்செந்தூர் கோவில் யானை :
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, தெய்வானை என்ற பெண் யானை உள்ளது.
மேலும் விழாக்களின் போதும் சுவாமி வீதி உலாவின் முன்பாக சென்று வரவும், அத்துடன் மற்ற நேரங்களில் கோவில் முன்பாக நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கும் பணியிலும், இந்த கோவில் யானை ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
யானை தாக்கி இருவர் உயிரிழப்பு :
இந்நிலையில் நேற்று பிற்பகலில் யானை கட்டிய மண்டபத்திற்கு யானை பாகன் உதயகுமாரும், அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம், பழுகல் பகுதியை சேர்ந்த சிசுபாலன் 45, என்பவரும் சென்றுள்ளனர். tiruchendur temple elephant Advice to send rehabilitation camp
அதனை தொடர்ந்து மண்டபத்திற்குள் வெளி ஆளான சிசுபாலன் நுழைந்ததை கண்டதும், ஆக்ரோஷமான கோவில் யானை, திடீரென அவரை தாக்கியது. உடனே பாகன் உதயகுமார் யானையை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். அவரை துதிக்கையால் துாக்கி வீசியது. இருவரும் சம்பவ இடத்திலியே உயிரிழந்தனர்.
பக்தர்களுக்கு தடை :
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, திருச்செந்துார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, மண்டபத்திற்குள் வைத்து யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் யானையின் குடில் அருகில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் இந்த பொருள்களுக்கு லக்கேஜ் கட்டணம் கிடையாது – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
முகாமிற்கு அனுப்ப ஆலோசனை :
இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப தற்போது ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் திருச்சி, முதுமலை, டாப்ஸ்லிப் ஆகிய மூன்று யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்ப வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின் முடிவு எட்டப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள் :
நான் முதல்வன் திட்டம் ரீல்ஸ் போட்டி 2024
இன்றைய தங்கம் விலை நிலவரம் (19.11.2024) ! மீண்டும் உயர தொடங்கிய கோல்ட்
ஹோட்டல்களில் இனி சில்வர் பேப்பர் பயன்படுத்த கூடாது – மீறினால் அபராதம்!
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (20.11.2024) பகுதிகள் – முழு விவரம் உள்ளே !
மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு