திரையரங்க வளாகத்திற்குள் FDFS Public Review எடுக்க Youtube சேனலுக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.
மேலும் இவர்கள் கொடுக்கும் ரிவியூ பெரும்பாலும் தமிழ் படத்திற்கு எதிராக உள்ளது என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள்.
கங்குவா:
சமீபத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் கங்குவா பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வெளிவரும் முன்பே படத்திற்கு தடை கேட்டு நீதி மன்றம் சென்றார்கள். அதனால் குறிப்பிட்ட தொகை வைப்புநிதி பெறப்பட்ட பின்னர் தான் படம் திரைக்கு வந்தது.
பின்னர் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில ஒலி அதிகமாக இருப்பதாகவும் இது மக்களின் செவி திறனை பாதிப்பதாக சொல்லப்பட்டது. அதனால் படம் பார்ப்பவர்களுக்கு தலைவலி போன்ற பிரச்சனைகள் வருவதாக சொல்லப்பட்டது. அதனை அந்த குறிப்பிட்ட இடத்தில் ௨ பாயிண்ட் ஒலி குறைக்கப்பட்டது.
அடுத்த சில தினங்களில் அந்த ஒலி அதிகம் வந்த பகுதி நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. அதனால் அந்த பகுதி திரையிடப்படவில்லை. இப்படி பல மாற்றங்களை செய்த போதிலும் படம் தோல்வி அடைந்துவிட்டது.
காந்தாரா என்னோடது – நடிகர் வினய் ஓபன் டாக் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!
FDFS Public Review:
இந்த பல சர்ச்சைகள் மற்றும் தோல்விக்கு காரணம் FDFS Public Review என்று தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் வைத்துள்ளது. அதாவது இந்த ஆண்டு வந்த வேட்டையன், இந்தியன் 2 , கங்குவா உட்பட அணைத்து படத்திற்கும் திரையரங்க வளாகத்திற்குள் எடுக்கும் Public Review தான் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
தடை செய்ய வேண்டும்:
மேலும் இது போன்று நடக்காமல் இருக்க திரையரங்க வளாக பகுதிகளில் ரசிகர்களிடம் யூடியூபில் எடுப்பதை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
திரையரங்க வளாகத்திற்குள் Youtube சேனலுக்கு தடை செய்ய வேண்டும் என்று சொல்லும் தயாரிப்பாளர்கள் திரையரங்கு வளாகத்தில் உள்ள தின்பண்டங்கள் விலை பற்றியும் பேச வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tamil Cinema News in SKSPREAD Website
பொன்னியின் செல்வன் பிரபலத்துக்கு விரைவில் திருமணம் – யார் தெரியுமா?
பாலாவின் வணங்கான் திரைப்படம் பொங்கல் 2025 ல் வெளியீடு – படக்குழு அறிவிப்பு !
மனைவி மோனிஷாவை விவாகரத்து செய்த நெல்சன்?? வெளியான ஷாக்கிங் தகவல்!
காந்தாரா என்னோடது – நடிகர் வினய் ஓபன் டாக் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!
தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு வரிவிலக்கு – பாஜக அரசு அறிவித்துள்ளது !