இயேசுவின் இறுதி நாள் பயணம்இயேசுவின் இறுதி நாள் பயணம்

இயேசுவின் இறுதி நாள் பயணம் வருடத்தில் எத்தனையோ வெள்ளி கிழமைகள் வந்தாலும் பாஸ்கா காலத்தின் இறுதி வெள்ளிக் கிழமை புனித வெள்ளி யாக உலகில் இருக்கும் அனைத்து கிறிஸ்ததவர்களும் கொண்டாடுகின்றனர்.

கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் அவர் அடைந்த சிலுவை மரணத்தையும் நினைவு கூறவே புனித வெள்ளி , இறைவனின் திருப்பாடுகளின் வெள்ளி , பெரிய வெள்ளி கொண்டாடப்படுகின்றது. திருச்சபையில் புனித வெள்ளி ஒரு கடன்திருநாளாக இருக்கின்றது.

புனித வெள்ளி அன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் விடுகின்றார்.

இது ஒரு வருத்தமான செய்தி தான்.ஆனால் நாம் ஏன் இதனை ஒரு கொண்டாட்டமாக சொல்கின்றோம்?.

காரணம் ஆண்டவரின் பாடுகளை நாம் உணர்வு பூர்வமாக அனுபவிப்பதால் புனித வெள்ளி ஒரு கொண்டாட்டமாக பார்க்கப்படுகின்றது.

இந்த நாட்களில் உலகின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றது.

தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!

திருவிவிலயத்தின் அடிப்படையில் காலங்களை கிறிஸ்து பிறப்பிற்கு முன் பழைய ஏற்பாட்டு காலம் என்றும் கிறிஸ்து பிறப்பிற்கு பின் புதிய ஏற்பாட்டு காலம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பழைய ஏற்பட்டு காலங்களில் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட ஒரு ஆட்டு குட்டியை பலியிடுவர்.

ஆசாரியன் ஒருவன் ஆட்டுகுட்டின் பலியிட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினை மக்கள் மேல் தெளிக்கும் போது மக்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் புதிய ஏற்பாடு காலங்களில் உலக மக்களின் பாவங்களை மன்னிக்க தன் ரத்தைத்தையே சிலுவையில் பலியாக தந்தார்.

இயேசு கிறிஸ்து உலகின் பாவங்களை சுமந்து தீர்க்கின்ற தேவ ஆட்டுக்குட்டி என்று விவிலியத்தில் கூறியுள்ளது .

இயேசு இறப்பதற்கு முதல் நாள் தான் சீடர்களுடன் இரவு உணவை உண்டார்.அப்போது இயேசு 12 சீடர்களின் கால்களை கழுவி குருத்துவத்தை ஏற்படுத்தினார். இயேசு நற்கருணை ஏற்படுத்தியதும் அந்நாளில்
தான்.

இயேசு தான் சீடர்களுடன் இரவு உணவை உண்ட பின் தான் சீடர்களோடு கெத்சமணி தோட்டத்தில் சென்று தனக்கு வரப்போகும் துன்பத்தை நினைத்து தந்தையிடம் வேண்டினர்.

துன்பம் தந்தை நினைத்தால் என்னை விட்டு அகழட்டும் என்று மனதுருகி வேண்டினர்.

இயேசு தோட்டைத்தை விட்டு வெளியே வரும் போது யூதாசு என்னும் தான் சீடர் ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைதுசெய்யப்படுகின்றார்.

1.இறைவனின் வார்த்தைகளை அனைவருக்கும் கற்பித்துக்கொண்டு இருந்தார்.

2.பல ஆண்டு ரத்தப்போக்கு நின்றது

3.கால் ஊனமுற்றோர் சரியாகுதல்

4.லாசரை உயிரோடு எழுப்பினர்

இன்னும் பல ….

தமிழகத்தில் நாளை (21.11.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு !

“இவன் எருசலேம் ஆலயத்தை இடித்து 3 நாளில் கட்டி விடுவேன் என்று கூறுகின்றான் ” இது போன்ற பல குற்றங்களை மக்கள் இயேசு மேல் சுமத்தினர்.

ஆனால் இயேசு மேல் சரியான குற்றம் கட்டுபிடிக்கப்படாததால் இயேசுவின் இரத்தப்பலியில் தன்னுடைய குடுப்பத்திற்கு பங்கில்லை என்று கூறி மக்கள் விருப்பப்படி பரபா என்னும் கொடிய கயவனை விடுதலை செய்து இயேவிற்கு சிலுவை மரணத்தை தீர்பிட்டர்.

இயேசுவிற்கு மரண தீர்ப்பிட்டு இயேசுவின் மேல் சிலுவை சுமத்தப்பட்டு மண்டைஓடு என்னும் இடத்திற்கு சென்றனர்.

சிலுவை சுமக்கும் வழியில் சிமோன் என்பவர் இயேசுவிற்கு சிலுவை சுமக்க உதவினார்.

இயேசுவிற்கு வடிந்த வேர்வையாய் வெரோணிக்காள் என்னும் மங்கை துடைத்த போது இயேசுவின் முகம் வெள்ளை துணியில் பதிந்தது.

மண்டைஓடு என்னும் இடத்திற்கு சென்ற பின் வீரர்கள் இயேசுவின் ஆடைகளை தங்களுக்குள் சிட்டு போட்டு பங்கிட்டு கொண்டனர்.

பின் இயேசுவின் 2 கை மற்றும் கால்களில் ஆணிகளால் அடித்தனர்.2 கயவர்களை இயேசுவின் வலப்புறம் ஒருவரும் இடப்புறம் ஒருவரையும் சிலுவையில் அறைந்தார்கள்.

Join WhatsApp Channel

1.இயேசுவை சிலுவையில் அறைந்த பின் “தந்தையே இவர்களை மன்னியும் ,இவர்கள் செய்வது என்னவென்று அறியாது செய்கின்றார்கள்”என்று பிறரின் பாவங்களுக்காக தந்தையிடம் மன்னிப்பு வேண்டினர்.

2.”இன்றைக்கு நீ என்னுடன் வான் வீட்டில் இருப்பாய் என்று உறுதியாக உனக்கு சொல்கின்றேன்” தான் அருகில் சிலுவையில் அறையுண்ட கயவன் ஒருவனை பார்த்து சொல்கின்றார்.

3.இயேசு தான் தாய் மற்றும் சீடரை பார்த்து “இதே உம் தாய் !இவரே உம் மகன் “என்று கூறினார்

4.”என் இறைவா ! என் இறைவா ! என் என்னை கைவிட்டிர் ?” என்று தந்தையிடம் கூறினார்.

5.”தகமாய்இருக்கின்றேன்” என்று இறை தாகத்தை கூறினார்.

6.”எல்லாம் நிறைவேற்று” என்று கூறினார்.

7.”தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைகின்றேன்” என்று சொல்லி தான் உயிரை விட்டார்.

கார்த்திகை மாதம் ஆன்மிகம் செய்திகள்

2025 புத்தாண்டு ராசிபலன்கள்: அதிர்ஷ்டத்தை அள்ள போகும் 5 ராசிகள்!!

அறுபடை வீடு முருகன் கோவில்!

கண்டுகொண்டேன் முருகா வந்தது யார் என்று கண்டுகொண்டேன் – முருகர் யுகம் ஆரம்பமே!

மதுரை காலதேவி அம்மன் கோவில் – கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் அதிசயம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *