இன்றைய தங்கம் விலை நிலவரம் (21.11.2024) ! மீண்டும் எகிறிய கோல்ட் ரேட் !இன்றைய தங்கம் விலை நிலவரம் (21.11.2024) ! மீண்டும் எகிறிய கோல்ட் ரேட் !

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (21.11.2024) பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்கம் விலை உயர்ந்தும், வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 115-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,145-க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

இதன் அடிப்படையில் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஷியா-உக்ரைன் இடையே மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டதன் விளைவாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் சென்றுள்ளது. இதன் காரணமாக அதன் விலை உயரத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (22.11.2024) ! ஏரியாக்கள் வாரியாக முழு லிஸ்ட் !

இதனையடுத்து வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *