Home » சினிமா » இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி – மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா!

இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி – மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா!

இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி - மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா!

இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி: தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகை தேவயானி. அப்போவே விஜய், அஜித், சரத்குமார், கார்த்தி, சத்யராஜ், பிரபு உள்ளிட்ட எல்லா நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து, அவர் நடித்த “நீ வருவாய் என” மற்றும் “விண்ணுக்கும் மண்ணுக்கும்” உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜகுமாரனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்துகொண்டார். இதன் காரணமாக பல ஆண்டுகள் அவருடைய பெற்றோர்கள் பேசாமல் வாழ்ந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், சீரியல் பக்கம் தன் கவனத்தை திருப்பினார். அதன் படி இவர் நடித்த கோலங்கள் நாடகம் மக்கள் மத்தியில் அதிக அளவில் ரீச்சை பெற்றது.

இந்நிலையில் நடிகை தேவயானி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை தேவயானி ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளாராம். அவர் இயக்கிய இந்த குறும்படத்தின் இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், அதை இளையராஜாவிடம் காட்டி இசையமைக்க சொல்லிக் கேட்கவே, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். மேலும் இந்த குறும்படம் தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு – என்ன நடந்தது?

பிரபல நடிகர் திடீர் மரணம் – என்ன காரணம் தெரியுமா?

விஜய் மகன் சஞ்சய் படத்துக்கு NO சொன்ன அனிருத்

ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை நடிகர் தனுஷ் திட்டவட்டம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top