Home » செய்திகள் » மகாராஷ்டிரா – ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 – தற்போதைய முன்னணி நிலவரம் !

மகாராஷ்டிரா – ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 – தற்போதைய முன்னணி நிலவரம் !

மகாராஷ்டிரா - ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 - தற்போதைய முன்னணி நிலவரம் !

இந்நிலையில் மகாராஷ்டிரா – ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதுள்ள முன்னணி நிலவரம் பற்றி காண்போம். Maharashtra – Jharkhand Assembly Election Results 2024 – Current Leading Status

தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியினரும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியினரும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன.

இதனையடுத்து பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து மகாயுதி கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன.

தற்போதைய முன்னணி நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியினர் முன்னிலை வகிக்கின்றனர். அந்த வகையில்

மகா விகாஸ் அகாடி கூட்டணி (காங்கிரஸ்) – 69

மகாயுதி கூட்டணி – 209

மற்ற கட்சிகள்- 10

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) காங்கிரஸ் (INC) கூட்டணி- 41 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது

பாஜக கூட்டணி – 36 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது

மற்ற கட்சிகள்- 2 இடங்களிலில் முன்னிலை வகித்து வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top