உலகில் உள்ள அணைத்து வங்கிகளுக்கும் தலைமையாக ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி கவர்னர் ஆக சக்திகாந்த தாஸ் (67) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஒடிசாவைச் சேர்ந்தவர்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆச்சு அவருக்கு?
மேலும் அவருடைய பதவி காலம் கடந்த 2021 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வர இருந்த நிலையில், அவரின் செயல்பாட்டை பார்த்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அவருடைய பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ICAI தேர்வுகள் 2025 தேதி மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
அதாவது சக்திகாந்த தாஸ் அசிடிட்டி (acidity) பிரச்சனை ஏற்பட்ட காரணத்தால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் நலமாக உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் தமிழக அரசில் பல்வேறு துறைகளிலும், மத்திய நிதித்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்