தமிழகத்தில் அரசு பள்ளி -யில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு” மூலமாக மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த உதவித்தொகை வழங்கி வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் – பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
மேலும் இந்த தேர்வு வருகிற 25.01.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு கல்வியாண்டில் ரூ.10,000/- (ஒரு மாதத்திற்கு ரூ.1000/- என) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் 2 திருமணம் கட்டாயம் – மீறினால் சிறை தண்டனை!
எனவே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தினை 30.11.2024 முதல் 09.12.2024 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் பதிவிறக்கம் செய்த படிவத்தை ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) தேர்வு கட்டணமாக பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்