தபால் அலுவலகம் மூலமாக டெபாசிட் செய்து நல்ல ஒரு வருமானத்தை பெறலாம். அதன்படி பல்வேறு திட்டங்கள் தபால் அலுவலகம் அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படி 15,000 டெபாசிட் செய்தால் நாம் 10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈர்க்கலாம். எப்படி தெரியுமா, போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் மூலமாக தான் இவ்வளவு பெரிய தொகையை நாம் பெற முடியும்.
போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம்
எனவே இந்த RD திட்டத்தில் மக்கள் தனியாகவோ அல்லது கூட்டமாக சேர்ந்து கணக்கு தொடரலாம். மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6.7 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. காலாண்டு அடிப்படையில் தான் இந்த வட்டி கொடுக்கப்படுகிறது. மேலும் குறைந்த வைப்பு தொகை ரூ 100 முதல் ஆரம்பிக்கலாம். RD கணக்கிற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் மட்டுமே.
பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் – பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
- இந்த திட்டத்தின் கீழ் மாதம் 5000 ரூபாய் டெபாசிட் செய்தால், மொத்த வைப்புத்தொகை ரூ. 3,00,000 ஆக இருக்க கூடும். மேலும் இந்த தொகைக்கு வட்டி ரூ. 56,830 சேர்ந்து, மொத்தமாக ரூ. 3,56,830 கிடைக்கும்.
- அதன்படி, 10000 ரூபாய் முதலீட்டில், ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.6,00,000 ஆக இருக்கும். இதற்கு வட்டியாக ரூ.1,13,659 சேர்த்தால், முதிர்வுத் தொகை ரூ.7,13,659 ஆக இருக்கும்.
- அதே போல் 15000 ரூபாய் டெபாசிட் செலுத்தி, மொத்தம் ரூ.9,00,000 டெபாசிட் பெறலாம். இதற்கு வட்டித் தொகையாக ரூ.1,70,492 கிடைக்கும். அப்போது, முதிர்வுத் தொகை ரூ.10,70,492 கிடைக்கும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்