தற்போது வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை தற்போது அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா :
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் காலத்தை நீட்டிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிகள், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
இதனையடுத்து வக்ஃப் மசோதா தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நடந்தது. மேலும் பிகார், புதுடெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் கருத்துகளை இனிதான் தெரிவிக்க உள்ளதாகவும், இதேபோல் பல்வேறு அமைப்புகளும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க முன்வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் கடிதம் :
அத்துடன் ஏற்கனவே உள்ள சட்டங்களில் பல மாற்றங்களை செய்யும் வகையில் வக்பு சட்டத்திருத்த மசோதா உள்ளதாகவும், அவ்வாறு செய்யப்படும் மாற்றங்கள் இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களை பாதிக்கும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதை பற்றி விவாதிப்பதற்காக 3 மாத காலம் என்பது போதுமானதாக இல்லை என்றும் எம்பிகள் கூறியுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் – பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
அறிக்கைக்கு காலக்கெடு நீட்டிப்பு :
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கும் காலக்கெடு தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை தற்போது அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள் :
தமிழ்நாட்டில் நாளை மின்தடை 2024! 38 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ!
15,000 டெபாசிட் செய்தால் – 10 லட்சத்துக்கு மேல் வருமானம் – இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள்!
இன்றைய தங்கம் விலை நிலவரம் (28.11.2024) ! சவரனுக்கு ரூ.120 குறைவு !
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதல்வர் ஸ்டாலின் கடிதம் !
மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த TVK தலைவர் விஜய் – எக்ஸ் தளத்தில் பதிவு !