வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று புயலாக வலுப்பெற்றது. மேலும் விஸ்வரூபம் எடுத்த இந்த புயலுக்கு ஃபெங்கல்( fengal ) புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
மேலும் தமிழகத்தில் அடுத்த மாதம் டிச., 4 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் கடலூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
42 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை அணி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மோசமான சாதனை!
இந்த சூழலில், அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை என 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்