Home » சினிமா » தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் - இணையத்தை கலக்கும் புகைப்படம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற தவெக கட்சியில் வாழை பட சிறுவன் பொன்வேல் எம் இணைந்த சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவிய நிலையில், தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தி காட்டினார். மேலும் அந்த மாநாட்டில் விஜய் பேசியது, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவருடைய கட்சியில் இதுவரை 1 கோடி பேர் சேர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பல்வேறு பிரபலங்களும் விஜய் கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக திமுக, அதிமுக மற்றும் நாதக உள்ளிட்ட கட்சியில் இருந்து தவெக கட்சிக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் வாழை பட பிரபலம் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சமீபத்தில் தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் வாழை.

மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரமான சிவனைந்தன் என்ற கேரக்டரில் பொன்வேல் எம் என்ற சிறுவன் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது பொன்வேல் எம் தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

போக்கிரி பட நடிகருக்கு திருமணம் – அவரே வெளியிட்ட கியூட் புகைப்படங்கள் இதோ!
96 படத்தின் பார்ட் 2 ரெடி? விஜய் சேதுபதி திரிஷா காதல் கைகூடுமா?
சமந்தாவை ஓரம் கட்டினாரா டான்சிங் குயின் ஸ்ரீலீலா – ”ஊ சொல்றியா” vs “கிசிக்” இரண்டில் எது BEST?
AR ரஹ்மான் டைவர்ஸ் விவகாரம் – நான் என் கணவனை பிரிய நினைக்கவில்லை – சாய்ரா பானு ஷாக்கிங் தகவல்!
அஜித்தின் Good Bad Ugly படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ் – தேவி ஸ்ரீ பிரசாத் விலகல் !
பிக் பாஸில் கடைசி நேரத்தில் மாறிய Eviction கார்டு – பலியாடான வர்ஷினி – உண்மையை உடைத்த பிரபலம்!
இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி – மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா!
கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன்? அதுவும் ரஜினி பட இயக்குனருடன் கூட்டணியா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top