சினிமாவில் பிரபலமாக இருக்கும் சமந்தாவின் தந்தை திடீர் மரணம் குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு சோகமான பதிவை வெளியிட்டுள்ளார்.
நடிகை சமந்தா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் நடிப்பில் வெளியான Citadel வெப் சீரிஸ் மூலம் உலகமெங்கும் பிரபலம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவில் அவர் என்னதான் ஒரு சாதனை படைத்தாலும் கூட, அவருடைய திருமண வாழ்க்கை கைகொடுக்காமல் போனது என்று தான் சொல்ல வேண்டும். நாக சைதன்யாவை விட்டு வெளியே வந்ததில் இருந்து அவர் சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார்.
சமந்தாவின் தந்தை திடீர் மரணம் – மனமுடைந்து சம்மு போட்ட சோகமான பதிவு – ரசிகர்கள் ஆறுதல்!
ஒரு பக்கம் யோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலும் கூட, இன்னொரு பக்கம் சினிமாவில் ஒரு கை பார்த்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபு குறித்து சோகமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!
அதாவது நடிகை சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக இன்று திடீரென உயிரிழந்துள்ளார். இது குறித்து சம்மு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு சோகமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” ‘Until we meet again Dad’ என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்