ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) லீவு என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – எந்த மாவட்டத்துக்கு தெரியுமா?
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று ஃபெஞ்சல் என்ற புயல் உருவாக இருப்பதாக ஏற்கனவே கணித்திருந்தது. அதன்படி இன்று உருவான அந்த புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்த வண்ணம் இருக்கிறது.
மேலும் புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என்றும், மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
இந்நிலையில் தமிழகத்தின் முக்கியமான மாவட்டம் ஒன்றில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை(நவம்பர் 30) சனிக்கிழமை தமிழகத்தின் முக்கிய மாவட்டமான கடலூர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்