ஏஐசிடிஇ சார்பில் பிரகதி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 800 மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நாளை (நவம்பர் 30) கடைசி தேதி என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. எனவே கல்லூரி மாணவிகள் உடனே விண்ணப்பிக்குமாறு எங்கள் SK SPREAD சைட் முலமாக கேட்டு கொள்கிறோம்.
பிரகதி உதவித்தொகை திட்டம்
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:
- பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
- மாணவியின் ஆதார் எண்
- வருமானச் சான்றிதழ்
- கல்விக் கட்டண நகல்
- சாதிச் சான்றிதழ்
நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – எந்த மாவட்டத்துக்கு தெரியுமா?
விண்ணப்பிக்க என்ன தகுதி?
- இந்த உதவித்தொகை பெற 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
- மேலும் விண்ணப்பதாரர் ரூ 8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.
- கல்யாணம் முடிந்த மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- புதிதாக விண்ணப்பிப்பவர் மட்டுமல்லாமல், ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றவர்களும் விண்ணப்பங்களைப் புதுப்பித்து, விண்ணப்பிக்கலாம்.
மேலும் பிரகதி உதவித்தொகை திட்டம் விவரங்களுக்கு, https://scholarships.gov.in/public/schemeGuidelines/AICTE/AICTE_2010_G.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்