மீனாட்சி அம்மன் கோவில் வருகிற 2026 ஜனவரியில் மாபெரும் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாக அறநிலைத்துறை தெரிவித்துள்ளது. அதாவது, மதுரை என்று எடுத்து கொண்டால் நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். மிகவும் பழமையான கோவிலில் ஒன்று தான் இந்த கோவில். மேலும் கடவுளுக்கே கல்யாணம் பண்ணி பார்த்த ஒரே ஊர் மதுரை தான். குறிப்பாக சித்திரை திருவிழா வந்து விட்டால் போதும் மதுரை மக்களை கையில் பிடிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.
2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – தேதி குறித்த அறநிலைத்துறை!
மீனாட்சி திருக்கல்யாணத்தில் தொடங்கி கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நாள் வரை மதுரை மக்களுக்கு கொண்டாடட்டம் தான். அந்த மாதம் மட்டுமின்றி, சில மாதங்களில் மீனாட்சிக்கு சில பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று அஷ்டமி சப்பர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் இந்த விழாவில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், தனித்தனி தேர்கள் அமைத்து வீதி உலா வரும்.
அதனை பார்க்க மக்கள் அனைவரும் வீதிகளில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வந்தனர். மேலும் மிகவும் சுத்தமான கோவில் என்ற விருதை இந்த வருடமும் மீனாட்சி அம்மன் கோவில் தான் வாங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அறநிலைத்துறை ஒரு முக்கியமான அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை மகா தீபம் தரிசன டிக்கெட் 2024 – ஆன்லைனில் எப்படி பெறுவது தெரியுமா?
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தற்போது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 25 கோடி பட்ஜெட்டில் குடமுழுக்கு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் வருகிற 2026 ஜனவரி 26ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக அறநிலைத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மதுரை மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!
கந்த சஷ்டி விரதம் 2024: முருகனுக்கு வீட்டில் இருந்து விரதம் இருப்பது எப்படி?
பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) – என்ன காரணம் தெரியுமா?