மத்திய அரசு பெண்களுக்கு ரூ. 20000 மதிப்புடைய சூரிய அடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இலவச அடுப்பு:
நாடு முழுவதும் இருக்கும் பெண்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதோடு சேர்த்து பல்வேறு சலுகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மம்தா அரசு பெண்களுக்கு “லட்சுமியின் பண்டார்” திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு அரசு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. அதேபோல், மற்ற மாநிலங்களில் “மாதம் லாட்லி பஹன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு ரூ. 20000 மதிப்புடைய சூரிய அடுப்பு – அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த அரசு!
இந்நிலையில் பெண்களின் வாழ்வின் மேம்பாட்டை உயர்த்தும் விதமாக அரசு சிறப்பு முயற்சி எடுத்துள்ளது. அதாவது, மத்திய அரசு “சூரிய அடுப்பு திட்டம்” அறிமுகப்படுத்த இருக்கிறது. மோடி அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் தற்போது இந்த ‘இலவச சூரிய அடுப்பு திட்டமும் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் வாயிலாக அடுப்பின் சந்தை மதிப்பு 15 ஆயிரம் முதல் ரூ. 20000 வரை பெண்களுக்கு வழங்க இருக்கிறது. மேலும் இந்த அடுப்புக்கு சிலிண்டர் தேவை இல்லை. (பெண்களுக்கு 20000 மதிப்புடைய சூரிய அடுப்பு)
குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: வெள்ள நிவாரண நிதி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சூரிய சக்தியைப் பயன்படுத்தி சமைக்கலாம். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உருவாகியுள்ள இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் மூன்று வகையான அடுப்புகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, . இரட்டை பர்னர் சூரிய அடுப்பு, இரட்டை பர்னர் கலப்பின அடுப்பு, ஒற்றை பர்னர் சூரிய அடுப்பு போன்றவைகளை வழங்கி வருகிறது. (பெண்களுக்கு 20000 மதிப்புடைய சூரிய அடுப்பு)
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு சூரிய சமையல் அடுப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- இதையடுத்து, உங்கள் ஆதார் அட்டை, பான் அட்டை, Bank பாஸ் புக் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும்.
- பதிவேற்றம் செய்த பின்னர் சமர்ப்பிப்பு பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இதையடுத்து, உங்களுடைய மொபைலுக்கு ஒரு உறுதிப்படுத்தல் செய்தி வரும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்