கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோவான சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவ ராஜ்குமார்:
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் தான் நடிகர் சிவ ராஜ்குமார். இவர் கன்னட சூப்பர் ஸ்டார் என்று அங்குள்ள ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஜெயிலரை தொடர்ந்து, தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து இருக்கிறார்.
சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை – அடக்கடவுளே என்ன ஆனது அவருக்கு?
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக ஹெச்.வினோத் அணுகியதாகவும் தகவல் வந்தது. ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என மறுத்து இருந்தார். இந்நிலையில் நடிகர் சிவ ராஜ்குமார் குறித்து ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
லட்சுமி தொடரில் இருந்து சஞ்சீவ் வெங்கட் விலகல் – அவருக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்!
அதற்காக இந்தியாவிலேயே சிகிச்சை பெற்ற அவர், தற்போது அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள் அவர் கேன்சரில் இருந்து குணமாகி விரைவில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்