Home » செய்திகள் » புஷ்பா 2 பார்க்கச் சென்ற பெண் மரணம் – தீவிர சிகிச்சையில் குழந்தைகள் !

புஷ்பா 2 பார்க்கச் சென்ற பெண் மரணம் – தீவிர சிகிச்சையில் குழந்தைகள் !

புஷ்பா 2 பார்க்கச் சென்ற பெண் மரணம் - தீவிர சிகிச்சையில் குழந்தைகள் !

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி வியாழக்கிழமை காலை மரணம் அடைந்ததாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் புஷ்பா 2 உருவாகியுள்ளது. இப்படத்தில் அவருடன் சேர்ந்து ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் சேர்ந்து நடித்திருந்தனர். எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் இன்று காலை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என ரூ. 1,000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இந்த படம் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லாததால் இப்படம் முதல் காட்சி காலை 9 மணிக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் நெஞ்சை பதறவைக்கும் அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. அதாவது, புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்ப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் கணவர், குழந்தைகளுடன் அதிகாலையிலேயே சென்றுள்ளனர்.

பெண் ஒருவர், கூட்ட நெரிசலில் ரேவதி (வயது 39) மயக்கம் அடைந்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

நடிகர் யுவன் ராஜ் நேத்ரன் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை!
சாமியாராக மாறிய கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி – வெளியான ஷாக்கிங் தகவல்!
பவர்ஸ்டார் திடீரென மருத்துவமனையில் அனுமதி – அடக்கடவுளே என்ன ஆச்சு அவருக்கு?
தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்? … ரசிகர்களுக்கு காத்திருக்கும் Mass ட்ரீட்!
சினிமா விமர்சனங்களுக்கு தடை கோரிய வழக்கு – நீதிமன்றம் அதிரடி முடிவு – குஷியில் Youtubers!
37 வயதில் சினிமாவில் இருந்து விலகிய 12th Fail நடிகர் – அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!
சாச்சனாவை காப்பாற்றிய விஜய் சேதுபதி – சிவக்குமார் எலிமினேஷன் அநியாயம்! – மனைவி சுஜா வருணி ஆதங்கம்!
தியேட்டரில் ஓடும் போதே OTT-யில் ரிலீசாகும் அமரன் – எப்போது தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top