ஃபெஞ்சல் புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான விழுப்புரம் மாவட்டத்தில், தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வெள்ள நிவாரணம் தொடர்பான டோக்கன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நிவாரண தொகை:
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழையின் அளவு வழக்கத்தை விட மிக அதிகமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால், இந்த நிவாரண தொகை எப்போது கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் நிவாரண தொகைக்கான டோக்கன் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து வருவாய் துறை செயலாளர் அமுதா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வெள்ள நிவாரணம் – டோக்கன் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
IND vs AUS : இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலிய Playing 11 அணி அறிவிப்பு!
அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு நிவாரணம் ரூ.2000 பெற மக்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த டோக்கன் விநியோகிக்கப்பட்டு அடுத்த 2 முதல் 3 நாட்களில் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என்று வருவாய் துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்