மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(DA) உயர்வு தொடர்பாக தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(DA) உயர்வு – யாருக்கெல்லாம் தெரியுமா?
மத்திய மற்றும் மாநில அரசு தொடர்ந்து அரசாங்கத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் ஐந்து சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சில துறைகளுக்கு மட்டுமே இந்த அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. குறிப்பாக மின்சார வாரிய ஊழியர்களுக்கு DA உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநில மின்சார வாரிய ஊழியர்களின் DA 5% உயர்த்தப்படுகிறது. தற்போது அவர்கள் 7வது ஊதியக் குழுவின் கீழ் 30 சதவீத அகவிலைப்படி உயர்வை பெறுகின்றனர்.
திட்டக்குழு துணைத் தலைவராக உதயநிதி நியமனம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!
எனவே இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு மாதம் ரூ.55 லட்சம் கூடுதல் செலவாகும் என்று திரிபுரா அரசு தெரிவித்துள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் அடுத்தடுத்து துறைகளுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்