அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டம்:
ஒவ்வொரு வருடமும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பாக தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுகள் இரண்டு முறை நடத்தி வருகிறது. இதில் இளநிலை, இடைநிலை, முதுநிலை, அதிவேகம் உள்ளிட்ட தேர்வுகளில் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் எழுதி சான்றிதழ் பெற்று வருகின்றனர்.
தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் – தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்!
இந்நிலையில், இந்த தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த சில வருடங்களாக மாற்றப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது புதிய பாடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பாடத்திட்டம் மாற்றப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
உண்மையான சாண்டா கிளாசின் முகம் இதான்? விஞ்ஞானிகள் வெளியிட்ட போட்டோ!
மேலும் புதிய பாடத்திட்டம் குறித்த தகவல்கள் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதாகவும், அதனை தேர்வு எழுத இருக்கும் தேர்வர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தொழில்நுட்ப தேர்வுகள் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்