மத்திய அரசின் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் பெண்களுக்கு 7.5% வட்டி வழங்கி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டம்:
உலகில் வாழும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக மத்திய அரசு தபால் நிலையங்கள் வாயிலாக பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பெண்களுக்கான கொண்டு வந்த திட்டம் தான் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம். எனவே இந்த திட்டம் மூலமாக குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தை மகளிர் தங்களுக்காகவோ அல்லது மைனர் பெண் குழந்தைகளின் ஆதரவாகவோ கணக்கை தொடங்கி கொள்ளலாம்.
இந்தியாவில் வசிக்கும் எந்தப் பெண்ணும் இந்த திட்டத்தின் கீழ் கணக்கை தொடர்ந்து கொள்ளலாம். மேலும் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் 7.5 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். குறிப்பாக ஒரு பெண் அதிகபட்சத் தொகையான ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால், அதற்கு வட்டியாக ரூ.32,044 கிடைக்கும். இதன் மூலம் மொத்தம் அவர்களுக்கு ரூ.2,32,044 கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 என்று தெரிவித்துள்ளது. எனவே ஆன்லைனில் இந்த திட்டத்தின் கீழ் எப்படி இணைவது என்பது குறித்து கீழே பார்க்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்: பெண்களுக்கு வட்டி மட்டும் ரூ.60,000!
மாதம் ரூ. 50 ஆயிரம் ஓய்வூதியம்? ரூ.15000 முதலீடு போட்டா போதும்! முழு விவரம் உள்ளே!
ஆன்லைனில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC) கணக்கை எவ்வாறு திறப்பது?
- இந்தியா போஸ்ட் அல்லது பங்கேற்கும் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். (எ.கா. பேங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா).
- இதனை தொடர்ந்து தங்கள் விவரங்களை பூர்த்தி செய்த பின்னர், ஆதார் மற்றும் பான் கார்டை சரிபார்ப்பதற்காக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- இதையடுத்து தேவையான தகவல்களை அளித்து, முதலீட்டுத் தொகையை (₹1,000 முதல் ₹2 லட்சம் வரை) தேர்ந்தெடுத்து, படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- அதன் பின்னர், நெட் பேங்கிங் அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு வாயிலாக நீங்கள் தேர்ந்தெடுத்த பணத்தை செலுத்த வேண்டும்.
- இதையடுத்து கணக்கு செயல்படுத்தப்பட்ட உடன் கணக்கு விவரங்கள் மற்றும் ஒப்புகையைப் பெற வேண்டும்.
- மேலும் உங்கள் கணக்கு மற்றும் வட்டியை ஆன்லைனில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்