பார்டர் கவாஸ்கர் தொடரின் IND vs AUS 2வது டெஸ்ட் போட்டி -யில் இந்திய அணி முதல் இன்னிங்சில் கிட்டத்தட்ட 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டது.
2வது டெஸ்ட் போட்டி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் என்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது 2வது டெஸ்ட் போட்டி இன்று, டிசம்பர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருக்கும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் விளையாடி வருகின்றனர்.
IND vs AUS: 2வது டெஸ்ட் போட்டி – இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் – அதிரடி காட்டிய மிட்சல் ஸ்டார்க்!
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆட்டத்தில் களமிறங்கிய, இந்திய அணி தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்த முறை ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கிய நிலையில் 3 ரன்களில் போலந்து பந்தில் LBW முறையில் அவுட் ஆனார். ஓப்பனிங் இறங்கிய ஜெய்ஸ்வால் 0 ரன்னில் டக் அவுட் ஆனார்.
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!
K.L.ராகுல் 37 ரன்களும், சுப்மன் கில் 31 ரன்களும், ரிஷப் பண்ட் 21 ரன்களும், நிதிஷ் ரெட்டி 42 ரன்களும், அஸ்வின் 22 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் விராட் கோலி வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். எனவே மொத்தம் 44 ஓவர்களிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களில் ஆல் அவுட் ஆகியது. இதில் மிட்சல் ஸ்டார்க் 14.1 ஓவர்கள் வீசி 6 விக்கெட் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தற்போது தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்