தளபதி 69ல் பிசியாக நடித்து வரும் விஜய்யின் உடல் எடை திடீர் அதிகரிப்பு காரணமாக ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது.
தளபதி விஜய்:
நடிகர் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் நடிப்பில் இருந்து விலகி அவர் முழுவதும் அரசியலில் களமிறங்க உள்ளார். மேலும் கட்சியை தொடங்கியதில் இருந்து மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அதன்படி, சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
விஜய்யின் உடல் எடை திடீர் அதிகரிப்பு – என்ன காரணம் தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதை ரசிகர்கள் பல்வேறு பாடல்களை போட்டு, ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் விஜய் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன ஆனது என்று தொடர்ந்து இது குறித்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் அவரின் உடல் எடை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மகன் சஞ்சய் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? அதுவும் தனுஷ் பட நடிகையா?
அதாவது, நடிகர் விஜய் நடிக்கும் “தளபதி 69” படத்திற்காக தான் விஜய் உடல் எடை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் ஒரு 55 வயது நபராக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைய இருப்பதாகவும், அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்