ஸ்பெயின் அரசு ஸ்மார்ட்போன்களில் அடிமையாவதால் மொபைலில் எச்சரிக்கை வாசகம் பதிக்க இருப்பதாக புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அபாய எச்சரிக்கை:
தற்போதைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத ஆட்களை பார்க்க முடியாது. சிறுசு முதல் பெருசு வரை போனில் மூழ்கி உள்ளனர். ஆனால் அந்த மொபைல் போனால் சில பிரச்சனைகள் உள்ளது என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்படி தொடர்ந்து மக்கள் ஸ்மார்ட்போன் அடிமையாதல் பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
குறிப்பாக, ஸ்மார்ட்போன் அடிமையாதல் தூக்கக் குறைவு, மன அழுத்தம், உறவுகளில் விரிசல் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளது. எனவே இதன் தீவிரத்தை உணர்ந்து ஸ்பெயின் அரசு, தற்போது புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது, சிகரெட் பாக்கெட்டுகளில் புகை பிடிக்காதீர் புற்றுநோயை உண்டாக்கும் என்று எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றிருக்கும்.
ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகம் – ஸ்பெயின் அரசின் புதிய முயற்சி!
சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் – எந்தெந்த தேதிகளில் தெரியுமா?
தற்போது அதே போல, ஸ்பெயின் அரசு, தனது நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் உடல்நல எச்சரிக்கை வாசகத்தை இடம் பெறும் விதமாக ஒரு புதிய முயற்சியை வழிவகுத்துள்ளது. இது போல மற்ற நாடுகளும் டிஜிட்டல் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு ஸ்பெயின் அரசு ஒரு முன்னோடியாக இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்