தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா -வில் திருமாவளவன் குறித்து பேசியது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
TVK விஜய்:
சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் வர்த்தக மையத்தில் அம்பேத்கர் நினைவு நாளான நேற்று (06.12.2024) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விருந்தினராக கலந்து கொண்டார். அவர்களுடன் சேர்ந்து, அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா – ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை? திருமாவளவன் அதிரடி முடிவு!
மேலும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தின் முதல் பிரதியை தவெக தலைவர் விஜய் வெளியிட, பேரன் ஆனந்த் டெல்டும்டெ பெற்றுக்கொண்டார். இந்த விழாவின் இறுதியில், தவெக கட்சி தலைவர் விஜய் பேசுகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளை நேரடியாக தாக்கி பேசினார். குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன் சாடி பேசிய நிலையில், அவருடைய மனசு இனி நம்மிடம் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார். இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க அதற்கு அவர், ” எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியிட்டது வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது.
அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் போனது திமுக அல்லது திமுக கூட்டணிகள் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கருத்தை பதிவு செய்திருந்தார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுத்தம் கொடுத்தால் நான் வராமல் இருப்பதற்கு விசிக பலவீனமான கட்சி இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா குறித்து பேசிய அவர், “விசிகவின் துணை பொதுச் செயலாளராக இருந்தாலும் அவர் சொல்லியிருக்கிற கருத்து அவருடைய சொந்த கருத்தாகும்.
ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகம் – ஸ்பெயின் அரசின் புதிய முயற்சி!
இதற்கு கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. வாய்ஸ் ஆஃப் காமன் என்ற நிறுவனத்தின் சார்பில் தான் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று கூறியுள்ளார். மேலும் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை. இதனால் அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்