பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 9வது வாரம் எலிமினேஷன் குறித்து தற்போது இணையத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 8:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 தற்போது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை இந்த வீட்டில் இருந்து ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார் ஆகியோர் எலிமினேட் ஆகி சென்றுள்ளனர்.
பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?
கடந்த வாரமே டபுள் எவிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சாச்சனா தப்பினார் என்று தொடர்ந்து சர்ச்சையை கிளப்பியது. ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக டபுள் எவிக்சன் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், நாட்கள் குறைவாகவும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதால் இந்த டபுள் எலிமினேஷன் நடக்க இருக்கிறது.
அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9வது வாரத்தில் முத்துக்குமரன், மஞ்சரி, ராணவ், பவித்ரா, சௌந்தர்யா, ஜாக்குலின், ராயன், ரஞ்சித், சத்யா, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா மற்றும் தர்ஷிகா ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவிக்கு தாவிய எதிர்நீச்சல் நடிகை – டிஆர்பிக்காக VIJAY TV போட்ட வலை!
அதாவது, அதிக வாக்குகளை பெற்றிருப்பது முத்துக்குமரன் என்றும், அவரை தொடர்ந்து சௌந்தர்யா, ஜாக்குலின் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து, டேஞ்சர் சோனில் ராயன், ரஞ்சித், சத்யா, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா ஆகிய 6 பேர் உள்ளனர். குறிப்பாக தர்ஷிகா 4.14 சதவீத வாக்குகளையும், ஆனந்தி 3.6 சதவீத வாக்குகளையும் கடைசியாக இடம் பெற்றுள்ளனர். எனவே அவர்கள் தான் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்