தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும்.
கனமழை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து பெஞ்சல் புயலாக மாறியது. இதனால் சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வந்ததால், மலைச் சரிவு ஏற்பட்டது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 8.30 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் நாளை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடிலெய்ட் டெஸ்ட்: 337 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா – கிறுக்குப்பிடி போடும் இந்திய அணி!
குறிப்பாக 11ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்