பிரபல காமெடி நடிகர் சூரி நடிக்க இருக்கும் புதிய படத்தில் மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் பட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரி:
நகைச்சுவை நடிகராக கோலிவுட்டில் கலக்கி வந்து, தற்போது ஹீரோவாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூரி. விடுதலை முதல் பாகத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். இந்த வெற்றிக்கு பிறகு, அவர் நடித்த கருடன் படமும் மாபெரும் வெற்றி அடைந்தது. இதையடுத்து வெளியான கொட்டு காளி சொதப்பியது என்று தான் சொல்ல வேண்டும். அடுத்ததாக தற்போது விடுதலை இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது.
சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை – அடேங்கப்பா இந்த ஹீரோயினா!
இதற்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதை தொடர்ந்து , இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் சூரி நடிக்க இருக்கிறாராம். விமல் நடித்த விலங்கு வெப் தொடர் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்தவர் தான் இந்த பிரசாந்த் பாண்டியராஜ். இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளார்.
பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?
இந்நிலையில் சூரி நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகி குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான் இந்த படத்தில் நடிக்க ஹீரோயினாக கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்னர், ஜகமே தந்திரம், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்