தமிழகத்தின் முக்கிய மாவட்டம் மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை வருகிற 2027ல் செயல்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை AIIMS:
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2018-ம் ஆண்டு கட்டப்படும் என்று கூறி 2019-ல் தான் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த வருடம் வரை அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே அப்படியே இருக்கிறது. இன்னும் எந்தவித பணிகளும் தொடங்க பட வில்லை என்று மக்கள் கூறி வந்தனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
2027ல் செயல்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – வெளியான முக்கிய தகவல்!
மேலும் இந்த கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி, பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் ஆர்.டி.ஐ.யில் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு ஆர்.டி.ஐ. தரப்பில் கூறியதாவது, ” தற்போது மருத்துவ கல்விசார் கட்டிடம், உணவுக்கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, நர்சிங் கல்லூரி, சேவை பிரிவு கட்டிடங்கள், மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு – குழுக் காப்பீட்டுத் திட்டம்! எவ்வளவு பணம் கிடைக்கும்?
மேலும் இதற்காக சென்னையைச் சேர்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் சுமார் ரூ.1,118.35 கோடிக்கு (ஜி.எஸ்.டி. வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. மதுரை எய்ம்ஸ்க்கான திட்ட மதிப்பீடு ரூ.2,021.51 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை, வருகிற 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்