டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் பதிவேற்றம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், டிசம்பர் 21 வரை சரிசெய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
TNPSC:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி(TNPSC) ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அதன்படி, குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது.
குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!
அதன்படி குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு மொத்தம் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், வெறும் 15.8 லட்சம் பேர் தேர்வை எழுதினர். மேலும் இந்த தேர்வு மூலம் முதலில் 6244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு 9491 காலி பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் 28ம் தேதி வெளியானது. அதன்பின்னர், ஆன்லைன் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வழிமுறைகள் வெளியிடப்பட்டது.
2027ல் செயல்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – வெளியான முக்கிய தகவல்!
மேலும் நவம்பர் 9 முதல் தொடங்கி 21ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சான்றிதழ் பதிவேற்றம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் டிசம்பர் 7 முதல் 21ம் தேதி இரவு இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கி உள்ளது. மேலும் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு (OTR) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் நாளை (10.12.2024) மின்தடை! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!