Home » சினிமா » சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் கமிட்டாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூர்யா:

நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை சந்தித்து படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சூர்யா 44 படத்தில் நடித்து முடித்து உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில்  சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்ற நிலையில் தற்போது, படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்திற்கு, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட்டாகி இருந்தார். இதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில்  தற்போது ஏ.ஆர். ரஹ்மான் திடீரென படத்திலிருந்து விலகி விட்டார் என இணையத்தில் தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் விலகியதற்கு என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை.

இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், சூர்யா 45 படத்தின் புதிய இசையமைப்பாளர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, சூர்யா 45 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் (sai abhyankkar) கமிட்டாகி இருப்பதாக  ட்ரீம் வாரியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்சி சேர ஆல்பம் பாடல் மூலம் பிரபலமான இவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பிக்பாஸ் தொகுப்பாளருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் – உண்மையை உடைத்த பிரபல நடிகை!

விஜய் டிவிக்கு தாவிய எதிர்நீச்சல் நடிகை – டிஆர்பிக்காக VIJAY TV போட்ட வலை!

பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?

விஜே விஷாலுடன் டேட்டிங் செய்த பிக்பாஸ் 8 போட்டியாளர் – யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
விஜய் மகன் சஞ்சய் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? அதுவும் தனுஷ் பட நடிகையா?
விஜய்யின்  உடல் எடை திடீர் அதிகரிப்பு – என்ன காரணம் தெரியுமா?  வெளியான ஷாக்கிங் தகவல்!
மும்பையில் பாதியில் நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’ .. மயக்கம் போட்ட ரசிகர்கள் – என்ன நடந்தது தியேட்டரில்?
லட்சுமி தொடரில் இருந்து சஞ்சீவ் வெங்கட் விலகல் – அவருக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்!
சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை – அடக்கடவுளே என்ன ஆனது அவருக்கு?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top