இலங்கை தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் RSA வெற்றி பெற்ற நிலையில் WTC புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
டெஸ்ட் போட்டி:
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. அதன்படி இந்த தொடரின் பர்ஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 233 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்து வந்தது. இதனை தொடர்ந்து, கிபர்ஹா மைதானத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி 2வது போட்டி தொடங்கியது.
WTC புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடம் – நெருக்கடியில் சிக்கிய இந்திய அணி!!
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி மொத்தம் 358 ரன்கள் குவித்து மொத்தம் விக்கெட்டையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 101, கேப்டன் பவுமா 78, கெய்ல் வேர்ரின் 105 ரன்கள் எடுத்து இருந்தனர். மேலும், இலங்கை அணியில் அதிகபட்சமாக லஹிரு குமாரா 4, பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
பின்னர் இந்த இமாலய ரன்களை குறி வைத்து களமிறங்கிய இலங்கை அணி, அவ்வளவு போராடியும் வெறும் 328 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மேலும், 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாபிரிக்கா 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை ஒயிட்வாஷ் செய்தது. அதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
இதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் 63.33% புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவை முந்தி தென்னாப்பிரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. அதனால் 57.29% புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க இருக்கும் அடுத்த 3 போட்டிகளில் 3 வெற்றி அல்லது 2 வெற்றி, 1 ட்ராவை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!
ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் – விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!
2027ல் செயல்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – வெளியான முக்கிய தகவல்!
தமிழ்நாட்டில் நாளை (10.12.2024) மின்தடை! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!